மதுரை : மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நகராட்சி நிர்வாகம் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், மற்றும் அன்னை செவிலியர் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை, நகராட்சி ஆணையாளர் இளவரசன் முன்னிலையில், நகராட்சி பொறுப்பு நகர்மன்ற தலைவர் தேன்மொழி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேரணியானது, நகராட்சி அலுவலகத்திலிருந்து தொடங்கி, முருகள் கோவில் தெரு, தேனிரோடு, தேவர்சிலை ரவுன்டானா உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக சென்று பொதுமக்களிடையே பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், பிளாஸ்டிக் பொருட்கள், கேரிபைகள், டீகப்புக்கள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதனைத்
தொடர்ந்து, பொதுமக்களுக்கு மஞ்சப்பைகள் வழங்கப்பட்டது. இதல், பாபா அணுஆராய்ச்சி நிலையத்தில் விஞ்ஞானி டேனியல் செல்லப்பா, நகராட்சி பொறியாளர் சசிக்குமார், பள்ளி தலைமையாசிரியர் பரமசிவம், மாசுகட்டுவாரிய அலுவலர்கள் உள்ளிட்ட பள்ளி மாணவர்கள், மாணவிகள், நகராட்சி தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி