செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சிக்குட்பட்ட காட்டாங்குளத்தூர் திருவள்ளுவர் தெரு கன்னி கோவில் தெருவில் சுமார் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த சாலையில் ஓரம் உள்ள பாதாள சாக்கடை மூடி மேல்தளத்தில் இருந்து கழிவு நீர் வெளியேறி சாலையில் வழிந்து ஓடுகிறது. இதன் காரணமாக, இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கழிவு நீர் வழிந்து ஓடுவதால் வழியாக செல்லும் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் பொதுமக்கள் திடீரென மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கழிவு நீர் வெளியேறுவதை முறையாகவும் நிரந்தரமாகவும் தடுக்க நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அப்போது அந்த பேச்சு வார்த்தைக்கு வந்த நகராட்சி ஆணையருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அன்பழகன்
















