திண்டுக்கல்: திண்டுக்கல் குட்டத்துப்பட்டி அருகே உள்ள வெயிலடிச்சான்பட்டியை சேர்ந்த பாண்டித்துரை மகன் சுபாஷ் சந்திரபோஸ்(33). இவர் கூலி தொழிலாளர். இந்நிலையில் இவர் வயிற்றுவலி காரணமாக மன உளைச்சலில் வீட்டின் அருகே உள்ள வேப்பமரத்தில் நைலான் கையிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன், சார்பு ஆய்வாளர் அங்கமுத்து மற்றும் காவலர்கள் சுபாஷ் சந்திரபோஸின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா