தேனி: போடி அருகே மேலசொக்கநாதபுரம், விநோபாஜி காலனியை சேர்ந்தவர். வேல்ராஜ் (40), இவர் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின் அடிப்படையில், தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு போடி அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு, விசாரணை செய்ய உத்தரவிட்டார். வேல்ராஜ் மீது அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.