திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர்.பிரதீப் IPS உத்தரவின் பேரில் புறநகர் துணை கண்காணிப்பாளன். உதயகுமார் மேற்பார்வையில் நத்தம் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர்.தங்க முனியசாமி தலைமையில்,சார்பு ஆய்வாளர்கள்.ராஜேந்திரன், சிவராஜ் ஆகியோர் கொண்ட தனிப்படை காவலர்துறையினர் கொலை நடந்த சில மணி நேரங்களிலேயே 2 பேரை கைது செய்தனர். விரைந்து கைது செய்த தனிப்படை காவல்துறையினரை மாவட்ட கண்காணிப்பாளர்.பிரதீப் பாராட்டினார். மேலும் திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சட்ட விரோதமாக செயல்படும் பார்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா