திண்டுக்கல் : திண்டுக்கல் சாணார்பட்டி அருகே உள்ள தவசிமடையை சேர்ந்தவர் ஜோசப் ராஜ் (25) இவருக்கும், அதே ஊரை சேர்ந்த அவரது உறவினரான சேசு ஆரோக்கியம் (30) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் சேசுஆரோக்கியம், அரிவாளால் ஜோசப் ராஜை வெட்டினார். படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து சாணார்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீராஜூதீன் வழக்குப்பதிவு செய்து சேசு ஆரோக்கியத்தை கைது செய்தார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா