திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தேரடி பகுதியை சேர்ந்தவர் மண்பாண்ட தொழிலாளியான வெங்கடேசன். உடல் நலக்குறைவு ஏற்பட்ட வெங்கடேசன் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் வீட்டை பூட்டி விட்டு அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கும் வீட்டிற்கும் சென்று வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பெயரில் வெங்கடேசன் குடும்பத்தினர் வீடு திரும்பி வந்து பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு பீரோவும் உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 7 சவரன் தங்க நகைகள் மற்றும் பத்தாயிரம் ரொக்கம் திருடப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து அளிக்கப்பட்ட தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த பொன்னேரி காவல்துறையினர் தடயங்களை சேகரித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மண்பாண்ட தொழிலாளியின் வீட்டின் பூட்டை உடைத்து 7 சவரன் நகை திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு