திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே (9). வயது சிறுமியை பலாத்காரம் செய்த அனுமந்தராயன் கோட்டை பகுதியைச் சேர்ந்த சந்தியாகு (வயது 51). என்பவரை சாணார்பட்டி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர். இந்த குற்றவாளிக்கு தண்டனை பெற்று தருவதற்காக எஸ்.பி பிரதீப் உத்தரவின் பேரில், சாணார்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா நீதிமன்ற தலைமை காவலர் விஜயலட்சுமி ஆகியோர் விரைவாக ஆவணங்களை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு திண்டுக்கல் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கினை அரசு வழக்கறிஞர் மைதிலி சிறப்பாக வாதாடினார்.
இதையடுத்து குற்றவாளிக்கு 25 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ 15 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சத்யா தாரா தீர்ப்பளித்தார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா