திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி அருகேயுள்ள மேலமாவடி தெற்கு தெருவைச் சேர்ந்தவா் அருள்ராஜ். இவர், கடந்த (29.9.2013)-இல் அப்பகுதியிலுள்ள உணவக உரிமையாளரான செல்வத்திடம் தகராறில் ஈடுபட்ட அதே பகுதி தொழிலாளிகள் பொன்னுலிங்கம், சங்கர் ஆகியோரை தட்டிக் கேட்டுள்ளார். இதனால், அவர்கள் இருவரும் சேர்ந்து அருள்ராஜை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததையடுத்து, அவர் அளித்த புகாரின்பேரில், திருக்குறுங்குடி காவல்துறையினர் வழக்குப்பதிந்து அண்ணன், தம்பி இருவரையும் கைது செய்தனர். வள்ளியூா் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் பொன்னுலிங்கத்துக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனையும் ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்