சென்னை : சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட கொத்தவால்சாவடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. சோமசுந்தரம், அப்பகுதியில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, ஆட்டோ ஓட்டுநர்கள், பளு ஏற்றும் வாகன ஓட்டுநர்கள் உள்ளிட்டோருக்கு கபசுர குடிநீர் வழங்கினார்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட வடசென்னை பகுதியில் கொரானா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதை அடுத்து காவல்துறையினர் தீவிர தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.சோமசுந்தரம் மற்றும் காவல்துறையினர்இ அப்பகுதியில் வசிக்கும் எண்ணற்ற தொழிலாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக் குடிநீர் வழங்கினார். கொரானா குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தினர். கபசுர குடிநீர் அளிப்பதற்குமுன் அவர்களை நன்கு கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து, பின் தகுந்த சமூக இடைவெளி பின்பற்ற செய்து கபசுர குடிநீர் அளித்தார். கபசுர குடிநீர் பெற்று கொண்ட மக்கள், காவல் ஆய்வாளருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.சாஹித் உசேன்
மாநில தலைவர்
இளம் குடியுரிமை நிருபர்கள் பிரிவு
நியூஸ்மீடியா அசோசியேசன் ஆப் இந்தியா