திருநெல்வேலி: திருநெல்வேலி,பாளையங்கோட்டை மேட்டுத்திடல் பகுதியைச் சோ்ந்தவா் ரஞ்சன் (42). விருதுநகா் மாவட்டத்தில் தொழில் நிறுவனங்கள் நடத்தி வருகிறாா். இவரது வீட்டில் 2.25 கிராம் தங்க நாணயங்கள் வைத்திருந்தாராம். அடிக்கடி தொழில் விஷயமாக வெளியூா்களுக்கு சென்றுவிடுவதால் அவரது குடும்பத்தினரை கவனித்துக் கொள்ள 20-க்கும் மேற்பட்ட வேலையாட்கள் வீட்டில் பணியாற்றி வருகின்றனா். இந்நிலையில் பீரோவில் வைத்திருந்த தங்க நாணயங்களை நகைகள் செய்வதற்காக பார்த்த பொழுது திருடு போய் இருப்பது தெரியவந்ததாம் இது குறித்து அவா் அளித்த புகாரின் பேரில், பாளையங்கோட்டை மேட்டுத்திடல் காவல் ஆய்வாளா், சுந்தரி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்