திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள காவல் தொலைதொடர்பு பிரிவில் பயன்படுத்தப்பட்ட கழிவு பொருட்களை (12.03.2026) (வியாழக்கிழமை) அன்று திருநெல்வேலி மாவட்ட காவல் தொலைதொடர்பு பிரிவு அலுவலகம் மூலம் பொது ஏலம் விடப்பட உள்ளது. இந்த ஏலத்தில், 32 எண்ணிக்கையிலான Heavy Duty Batteries மற்றும் 533 இதர பொருட்களுக்கு பொது ஏலம் நடத்தப்பட உள்ளது.
Heavy Duty பேட்டரி – களை ஏலத்தில் எடுக்க விரும்புவோர் மாசு கட்டுபாட்டு வாரியத்தில் (Pollution Control Board) உரிமம் அளித்துள்ள உரிய சான்றிதழ்களுடன் (Hazardous Certificate, Air and water certificate) கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதர 533 பொருட்களை ஏலம் எடுக்க விருப்பமுள்ளவர்களும் இந்த பொது ஏலத்தில் கலந்து கொள்ளலாம் என மாவட்ட காவல்துறை சார்பாக தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















