தென்காசி : கடையநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலக்கடைய நல்லூர் பகுதியை சேர்ந்த ஜெயராஜ் என்பவரின் மகன் துரைராஜ் என்பவர் சொந்த வேலை காரணமாக இருசக்கர வாகனத்தில் கடையநல்லூர் வந்தபோது வழியில் அவரது செல்போன் தவறி கீழே விழுந்தது தொலைந்து விட்டதாகவும், தொலைந்த செல்போனை மீட்டுத் தருமாறு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் திரு. ராஜா அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் சார்பு ஆய்வாளர் திருமதி. முருகேஸ்வரி மற்றும் காவலர் திரு.ராஜா ஆகியோர் இணைந்து தொலைந்த செல்போனை 30 நிமிடத்திற்குள் மீட்டு காவல் ஆய்வாளர் அவர்கள் முன்னிலையில் உரிய நபரிடம் ஒப்படைக்கப்பட்டது. தொலைபேசியை பெற்றுக்கொண்ட நபர் தென்காசி மாவட்ட காவல் துறைக்கு தனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்தார்.