மதுரை: காணாமல் போன மகன் கொரோனா பாதித்ததால் கிடைக்க பெற்றார். மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் தாய்க்கு உதவிய ரெட் கிராஸ் அமைப்பினர். மதுரை சுப்ரமணிய புரத்தை சேர்ந்தவர் வீரம்மாள் இவரது கணவர்.சண்முகம்.கேன்சர் நோயாளி. இன்னும் இரண்டு நாட்களில் இவருக்கு கேன்சர் கட்டி ஆபரேஷன் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் நடை பெற உள்ளது.இவருக்கு ஐந்து குழந்தைகள். கடைசி மகன் அரவிந்த் (பெயர் மாற்ற பட்டுள்ளது) பதினான்கு வயதான அவன் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி விட்டான்.
எங்கு தேடியும் கிடைக்க வில்லை. இதற்கிடையில் கோயம்புத்தூர் குழந்தைகள் பாதுகாப்பு கமிட்டியினர் அவனை பஸ் ஸ்டாண்டிலிருந்து மீட்ட்டனர். பரிசோதனை செய்ததில், அவனுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது.
தற்போது, கோயம்பத்தூர் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டான். தொடர்ந்து அவனை கவனித்து கொள்ள ஆள் இல்லையாதலால் அவனுடைய தாயாருக்கு கோயம்பத்தூர் குழந்தைகள் பாதுகாப்பு கமிட்டியினர் மதுரை ஆட்சியர் அனீஸ்சேகருக்கு தகவல் தெரிவித்தனர். மதுரை மாவட்ட ஆட்சியர், அந்த பெண் மகனை பார்ப்பதற்கு வேண்டிய உதவிகளை உடனடியாக செய்ய மதுரை ரெட் கிராஸ் அமைப்பிற்கு உத்திரவிட்டார்.
அதன் படி, ரெட் கிராஸ் அமைப்பின் நிர்வாகிகள் கோபாலகிருஷ்ணன், ராஜ்குமார், முத்துக்குமார், ராஜு, தினேஷ் ஆகியோர் அவர்களின், குடும்பத்தினரை நேரில் போய் சந்தித்து, விபரம் கேட்டறிந்தனர். அப்போது அந்த சிறுவனின் தாயார் மகனை காணாமல் நாங்கள் தவித்து கொண்டிருக்கிறோம்.
தங்கள் குடும்பம் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் இருப்பதாலும், இப்போது எவ்வித பண வசதியும் இல்லையாதலால் தங்களால் கோயம்பத்தூர் சென்று பார்த்து வர இயலாது என்றும் தெரிவித்தார். தங்களுக்கு உதவும் படி கேட்டு கொண்டார். உடனே ரெட் கிராஸ் அமைப்பினர் இ. பாஸ் பெற்று இலவசமாக கார் வசதி ஏற்பாடு செய்து, நிவாரண பொருள்களும் கொடுத்து அந்த பெண்ணையும் அவரது மூத்த மகனையும் கோயம்பத்தூர் அழைத்து சென்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி