திருநெல்வேலி : திருநெல்வேலி பாளையங்கோட்டை ரயில் நிலையம் அருகில் உள்ள செயின்ட் பால்ஸ் சாலையில் ஒரு வீட்டில் வசந்தா என்னும் எழுபது வயது மூதாட்டி ஒருவர் வீட்டின் சுற்றுப்புறத்தை சுத்தம் செய்யும் பணியை ஒரு பகுதியில் உள்ள கழிவு நீர் தொட்டிக்கு மேலே நின்று பார்த்துக் கொண்டிருந்த பொழுது தொட்டியின் மேல் பகுதி உடைந்து உள்ளே விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
இதனையடுத்து பாளையங்கோட்டை தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தவுடன் உதவி மாவட்ட அலுவலர், கார்த்திகேயன் தலைமையில், வீரர்கள் செல்வம், சண்முகராஜா, கிருஷ்ணராஜா, முருகன், முருகேசன் ஆகியோர் உடனடியாக விரைந்து சென்று கழிவு நீர் தொட்டிக்குள் விழுந்து கிடந்த மூதாட்டியை மிகுந்த சிரமத்திற்கிடையே அரை மணி நேரம் போராடி உயிருடன் மீட்டனர். வீட்டின் அருகில் உள்ள பொதுமக்கள் தீயணைப்பு துறையினரை வெகுவாக பாராட்டினர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்