இராமநாதபுரம்: இராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் மற்றும் நகர் பகுதிகளில் தொடர் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவரை காவல்துறையினர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த அவரது செயல்பாடுகளை கருத்தில் கொண்டு, மாவட்ட காவல்துறையின் பரிந்துரையின் பேரில் அவருக்கு எதிராக குண்டர் தடுப்புக் காவல் சட்டம் பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
















