தென்காசி: தென்காசி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் நீர்நிலைகளான குளங்கள், ஏரிகள் மற்றும் அணைகள் அனைத்தும் முழு கொள்ளளவை எட்டிய நிலையில் மாவட்டத்தில் பொதுமக்கள் குடியிருக்கும் பல பகுதிகளில் நீர் சூழப்பட்டும், சில இடங்களில் கட்டிடங்கள் சேதமடைந்தும் பொதுமக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஶ்ரீனிவாசன் அவர்களின் உத்தரவின் பேரில் தென்காசி மாவட்ட காவல்துறையினர் பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக நீர்நிலை அருகில் இருக்கும் பொதுமக்கள் அனைவரையும் முன்னெச்சரிக்கையாக திருமண மண்டபம் போன்ற இடங்களுக்கு மாற்றியும், அவர்களுக்கு தேவையான உணவுகளை வழங்கியும், சாலையில் சரிந்து விழுந்த மரங்களை விரைவில் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தும், வெள்ளத்தில் சிக்கி தவித்த மக்களை தீயணைப்பு மீட்பு படையினருடன் இணைந்து மீட்டும் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் அயராது ஈடுபட்டு வருகின்றனர்.