திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி சரகத்திற்கு உட்பட்ட மூலக்கரைப்பட்டி நாங்குநேரி களக்காடு, மற்றும் வள்ளியூர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் காணாமல் போவதாக புகார் காவல் நிலையங்களுக்கு வந்ததன் பேரில் மேற்படி திருட்டில் ஈடுபடும் நபர்களை விரைந்து கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன், இ.கா.ப, அவர்கள் நாங்குநேரி உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.ரஜத் R.சதூர்வேதி., இ.கா.ப, அவர்களுக்கு அறிவுறுத்தியதன் பேரில் மேற்படி உதவி காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையிலான உட்கோட்ட தனிப்படை போலீசார் மற்றும் மூலக்கரைபட்டி உதவி ஆய்வாளர் திரு.ஆழ்வார், தலைமை காவலர்கள் திரு. ஆறுமுகநயினார், திரு.நம்பிராஜன், முதல்நிலை காவலர் திரு.பெருமாள், மற்றும் இரண்டாம்நிலை காவலர் திரு.பெருமாள் ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
மூலக்கரைப்பட்டி பகுதியில் பைக் திருட்டில் ஈடுபட்ட களக்காடு, ஜவகர் தெருவை சேர்ந்த பால்பாண்டி என்பவரின் மகன் நெல்சன்ராஜன் (45), என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 7 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேற்படி காவல் துறையினர் விசாரணையில் திருடப்பட்ட வாகனங்கள் களக்காடு,வள்ளியூர், உவரி, சேரன்மகாதேவி மற்றும் நெல்லை மாநகரம் பகுதிகளில் திருடப்பட்டது தெரியவந்துள்ளது. இவ்வழக்கில் சிறப்பாக விசாரணை மேற்கொண்டு பைக் திருட்டில் ஈடுபட்ட நபர்களை கைது செய்த நாங்குநேரி உட்கோட்ட தனிப்படை போலீசார் மற்றும் மூலக்கரைப்பட்டி காவல்நிலைய போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன், இ.கா.ப அவர்கள் வெகுவாக பாராட்டினார்.