தருமபுரி : தருமபுரியில் அரசு மருத்துவமனை , உழவர் சந்தை, மாவட்ட விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட இடங்களில் அடிக்கடி இருசக்கர வாகன திருட்டு நடைபெற்று வந்தது.
தொடர் வாகன திருட்டை தடுக்க தருமபுரி நகர காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.ரங்கசாமி அவர்கள் தலைமையிலான தனிப் படை அமைக்கப்பட்டு கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து இருசக்கர வாகன திருடர்களை தேடி வந்தனர். இந்நிலையில் தருமபுரி – சேலம் மெயின் ரோடு பாரதிபுரத்தில் நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் திரு.விஜய் சங்கர் மற்றும் திரு.பெருமாள் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் அதி வேகத்தில் வந்த நபரை பிடித்து விசாரித்த போது அவர் ஒட்டி வந்த இருசக்கர வாகனம் திருட்டு வாகனம் என தெரியவந்தது. இதையடுத்து நடத்திய தீவிர விசாரணையில் அவர் நல்லம்பள்ளி கெட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த குருசாமி மகன் நாகராஜ் (37), என்பதும் தருமபுரியில் பல்வேறு இடங்களில் வாகனங்களை திருடியதும் தெரியவந்தது உடனடியாக அவரை கைது செய்து பதுக்கி வைத்திருந்த சுமார் 8 இருசக்கர வாகனங்கள் மீட்கப்பட்டன திருடிய வாகனங்களை வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்து அதன் மூலம் கிடைத்த பணத்தை மது அருந்தி செலவு செய்ததாக மேற்கண்ட நபர் தெரிவித்துள்ளார். பின்னர் மேற்கண்ட நபரின் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.