தென்காசி: தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி காவல் நிலைய சரகம் பொட்டல்புதூர் பகுதியில் கடந்த (09.01.26) அன்று பூட்டியிருந்த நான்கு வீடுகளில் தொடர்ச்சியாக அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தங்கம், வெள்ளி மற்றும் பணம் ஆகியவற்றை திருடி சென்றதாக பாதிக்கப்பட்ட நபர்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.S.மாதவன் T.P.S., அவர்களின் உத்தரவின் பேரில் ஆழ்வார்குறிச்சி காவல் ஆய்வாளர் அவர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை பல்வேறு கோணங்களில் தீவிரமாக தேடிவந்தனர்.
320 க்கும் மேற்பட்ட CCTV காட்சிகளை ஆராய்ந்து வள்ளியூரை சேர்ந்த சிவலிங்கம்(40). செட்டிகுளத்தைச் சேர்ந்த சிவகுமார்(42). மற்றும் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ்(27). ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் மேற்படி நபர்கள் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது, அவர்களிடமிருந்து திருடப்பட்ட 157 கிராம் தங்கம், 874கிராம் வெள்ளி மற்றும் பணம் ரூபாய் 15,000 பறிமுதல் செய்யப்பட்டு மேற்படி மூன்று நபர்களும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். மேற்படி கைது செய்யப்பட்ட சுரேஷ் என்பவருக்கு தருமபுரி, திருப்பூர் ஈரோடு, நாமக்கல், திருவண்ணாமலை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் 28 திருட்டு வழக்குகளும், சிவலிங்கம் என்பவருக்கு தென்காசி, தூத்துக்குடி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் 11 திருட்டு வழக்குகளும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குற்றவாளிகளை கைது செய்து வழக்கின் சொத்துக்களை பறிமுதல் செய்த காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.
















