தருமபுரி: தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே பூமரத்து பள்ளம் கிராமத்தைச் சார்ந்த விவசாயி மாதேஷ் என்பவர் வீட்டினுள் புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் வைத்திருந்த ரூ.1லட்சம் மற்றும் தங்க நகைகளை திருடி சென்றனர்.
இது குறித்த புகாரின் அடிப்படையில் மாரண்டஅள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். சந்தேகத்தின் அடிப்படையில் சபரி 31.அரவிந்த் 23. ராஜா 29. ஆகியோரை விசாரித்ததில் பணத்தை திருடிதாக குற்றத்தை ஒப்புக் கொண்டனர். அவர்களிடமிருந்து ரூ. 1லட்சம் பணம் மற்றும் நகைகளை பறிமுதல் செய்து மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.