திண்டுக்கல் : திண்டுக்கல் பகுதிகளில் தொடர்ந்து மர்ம நபர்கள் செயின் பறிப்பில் ஈடுபட்டனர்.இதையடுத்து செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க திண்டுக்கல் எஸ்.பி பாஸ்கரன் உத்தரவிட்டார்.அதனைத் தொடர்ந்து டவுன் டி.எஸ்.பி, கோகுல கிருஷ்ணன் மேற்பார்வையில்,இன்ஸ்பெக்டர் உலகநாதன்,நகர் உட்கோட்ட குற்றப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர்கள் வீரபாண்டியன், ஜார்ஜ் எட்வர்டு,தலைமை காவலர்கள் ராதாகிருஷ்ணன்,முகம்மது அலி,விசுவாசம், சக்திவேல்,ரூரல் கிரைம் டீம் ssi மணிகண்டன், ஏட்டு உதயசூரியன்,மணிவாசகம் மற்றும் CCTV தலைமை காவலர்கள் ஜான் சுரேஷ்குமார்,செல்விஆகியோர் இணைந்து பல்வேறு CCTV camera-களை ஆய்வு செய்தனர். இதில் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மதுரையைச் சேர்ந்த அன்பு,ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த பிரபு என்பது தெரியவந்தது.இதையடுத்து அன்பு,பிரபு ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா