தேனி: போலீஸார் தீவிர வாகன சோதனை செய்தனர். பெரியகுளம் நான்கு வழி சாலை செல்லும் ரோட்டில் தேவதானப்பட்டி நுழைவு வழியில் அமைந்துள்ள, போலீஸார தணிக்கை சாவடியில் தேவதானப்பட்டி சிறப்பு ஆய்வாளர் குமார் மற்றும் காவலர்கள் கொரோனா விழிப்புணர்வு பரிசோதனையில் ஈடுபட்டனர்.
ஊரடங்கு உத்தரவை மீறி இரு சக்கர வாகனத்தில் காரணம் இல்லாமல் சுற்றி திரிந்த 10 வாகனங்கள், பறிமுதல் செய்யப்பட்டு தேவதானபட்டி காவல் நிலையத்திற்கு, கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து ஊரடஙகு வாகன சோதனை செய்யப்பட்டது.













