மதுரை: தமிழர் திருநாள் முன்னிட்டு (15.01.2026)- வருகின்ற தேதியன்று மதுரை மாநகர் அவனியாபுரம் மற்றும் மதுரை மாவட்டத்தில் (16.01.2026) அன்று பாலமேட்டிலும், (17.01.2026) அன்று அலாங்காநல்லுாரிலும் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டில் கலந்து கொள்வதற்காக காளைகள், காளைகளின் உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள் மற்றும் ஜல்லிகட்டினை காண்பதற்காக சுற்றுப்புறமுள்ள கிராமங்களிலிருந்து வருகை தரும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மேற்படி இடங்களில் கூடுவதை முன்னிட்டு, அப்பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு நெரிசல் ஏற்படாதவாறு முறையான பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டியும், ஜல்லிக்கட்டு நடைபெறும்.
இடங்களில் தலா 2000 காவலர்கள் வீதம் பாதுகாப்பு பணிகளில் அமர்த்தவும், மாடுபிடி வீரர்கள் மற்றும் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யும் இடங்களிலும், காளைகள் அவிழ்த்துவிடும் வாடிவாசல், பொதுமக்கள், பத்திரிக்கையாளர்கள் அமரும் இடங்கள் மற்றும் முடிவில் காளைகளை அழைத்துச் செல்லும் இடங்களில் சிறந்த முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து எவ்வித அசம்பாவிதமின்றியும், சிரமமின்றியும் ஜல்லிக்கட்டு இனிதே நடைபெற வேண்டி இன்று (03.01.2026) தமிழக காவல்துறை கூடுதல் இயக்குனர் சட்டம் மற்றும் ஒழுங்கு , Dr.மகேஷ்வர்தயாள், IPS, அவர்கள் நேரில் பார்வையிட்டு செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ.லோகநாதன்.IPS., Dr.அபினவ்குமார், IPS., மதுரை சரக காவல்துறை துணை தலைவர் மற்றும் திரு.அரவிந்த்,IPS., மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர்களுக்கு அறிவுறை வழங்கினார்கள்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்
















