தேனி: தேவதானப்பட்டி அருகே சில்வார்பட்டியில் கொரானா விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது தேவதானப்பட்டி அருகே உள்ள சில்வார்பட்டி கிராம ஊராட்சியில் கொரானா பற்றிய விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இதில் தேவதனபட்டி சப் இன்ஸ்பெக்டர் திரு.இத்ரீஸ் கான், தலைமையில் பொதுமக்கள் பொது இடங்களில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் மற்றும் பொது இடங்களில், மற்றும் சமூக இடைவெளி குறித்து பொது மக்களிடம் விரிவாக விளக்கப்பட்டது.
கொரோனா விழிப்புணர்வு இதில் தேவதானப்பட்டி காவல் நிலையத்தின் சார்பாக துணை ஆய்வாளர்,காவலர்கள் மற்றும் சில்வார்ப்பட்டி கிராம மக்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் கலந்து கொண்டனர். இதில் மூன்றாம் அலை குறித்தும், தடுப்பூசி குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.