சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் தேசிய சாலை பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு நகர போக்குவரத்து காவல்துறையும், ஆல் தி சில்ரன் அமைப்பும் இணைந்து திருப்பத்தூர் சாலையில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து விதிமுறைகள் விழிப்புணர்வு டி.எஸ்.பி பார்த்திபன் தலைமையில் நடைபெற்றது. அப்பொழுது அவர் பேசுகையில் இருசக்கர வாகனத்தில் இருவர் மட்டும் செல்ல வேண்டும், கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும், மது அருந்தி வாகனம் ஓட்டக்கூடாது,சாலை விதிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும், என தெரிவித்தார் குறிப்பாக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இரு சக்கர வாகனத்தை ஓட்டுவதற்கு அனுமதிக்க கூடாது, நம் உயிரை நாம் தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஹெல்மெட் அணிந்து வந்தவர்களை வாழ்த்தி கேக் பாக்ஸ் வழங்கினர். நகர் காவல் ஆய்வாளர் அந்தோணி செல்லத்துரை அவர்கள், சார்பு ஆய்வாளர்கள் அன்சாரி உசேன் மற்றும் சஞ்சீவ், ரெக்ஸ், மற்றும் காவல் ஆளுநர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை போக்குவரத்து காவல் சார்பு ஆய்வாளர் அகிலன், சிறப்பு சார்பு ஆய்வாளர் கலா, போக்குவரத்து காவல் ஆளுநர்கள் மற்றும் ஆல் தி சில்ரன் ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திர பிரபு ஆகியோர் செய்திருந்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி