தூத்துக்குடி : 2025-ம் ஆண்டிற்கான நேரடி காவல் சார்பு ஆய்வாளர்கள் (தாலுகா மற்றும் ஆயுதப்படை) பதவிக்களுக்கான எழுத்து தேர்வு வருகின்ற (21.12.2025) அன்று தூத்துக்குடி மாவட்டத்தில் பி.எம்.சி மெட்ரிகுலேசன் மேல்நிலை பள்ளி, வஉசி கல்லூரி, கிரேஸ் இஞ்சினியரிங் கல்லூரி மற்றும் காமராஜ் கல்லூரி ஆகிய 4 மையங்களில் நடைபெறவுள்ளது. மேற்படி தேர்வு மையங்களுக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் இன்று (19.12.2025) நேரில் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். இந்நிகழ்வின் போது தூத்துக்குடி காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. ஆறுமுகம், தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன் இ.கா.ப, ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சுதீர் உட்பட காவல்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
















