சென்னை : பள்ளி பொது தேர்வுக்கு செலுத்த வேண்டிய, கட்டணத்தை பெற்றோர் செலுத்தாததால், மனமுடைந்த மாணவி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். புழல், மதுரா மேட்டுப்பாளையம், பகுதியை சேர்ந்த தையல் தொழிலாளியின் 17 வயது மகள், மாதவரத்தில் உள்ள தனியார் பள்ளியில், பிளஸ் 2 படித்து வந்தார். இன்று, பொதுத் தேர்வு துவங்கும் நிலையில், அதற்கான கட்டணத்தை, அவரது பெற்றோர், நேற்று முன்தினம் வரை செலுத்தவில்லை, எனக் கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த மாணவி, நேற்று முன்தினம், இரவு வீட்டில் துாக்கில் தொங்கினார். உயிருக்கு போராடிய அவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு, மூலக்கடையில் உள்ள தனியார் மருத்துவமனையில், சேர்ந்தனர். அங்கு மாணவியை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இது குறித்து, புழல் காவல் துறையினர், விசாரனை நடத்தி வருகின்றனர்.