திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள ஜெயா கல்வி குழுமத்தின் பாரத் மெட்ரிக் தனியார் மேல்நிலைப் பள்ளியில் மற்றும் பாரத் சி.பி.எஸ். பள்ளியில் இன்று
என் ஓட்டு என் உரிமை என்னும் தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் ஜெயா கல்வி குழுமத்தின் தலைவர் கனகராஜ் கலந்து கொண்டு பொன்னேரி காவல்துறையுடன் இணைந்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர். அனைவரும் 100% வாக்களிக்க வேண்டும் உங்கள் ஓட்டு உங்கள் உரிமை என் ஓட்டு என் உரிமை என்கிற விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தினர். விழிப்புணர்வு பேரணியில் கல்விக் குழும துணைத் தலைவர் நவராஜ் துணைச் செயலாளர் திருமதி தீனா இயக்குனர் கருணாகரன் பள்ளியின் முதல்வர் ரோகினி கௌரிசங்கர் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு