திருநெல்வேலி: தமிழகத்தில் வருகின்ற 19.02.2022-ம் தேதி நகர்புறம் மற்றும் பேரூராட்சிகளில் நடைபெற இருக்கின்ற தேர்தலை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட 442 வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்கும் இயந்திரத்தை பாதுகாப்பாக எடுத்து செல்வதற்காக 34 வாகனங்கள் (Mobile Party) தயார் நிலையில் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.மேலும் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 18 விரைவு நடவடிக்கை குழு வாகனங்களும் (Quick Reaction Team), 40 அதிவிரைவு படை வாகனங்களும் மற்றும் போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட 36 இருசக்கர ரோந்து வாகனங்களும் பாதுகாப்பு பணிக்கு ஈடுபடுத்தப்பட உள்ளன. இதனை இன்று திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன், IPS., அவர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் தனியார் வாகன ஓட்டுநர்களுக்கு தேர்தல் பாதுகாப்பு குறித்த அறிவுரைகள் வழங்கி மேலும் சாலையில் செல்லும் போது வாகனங்களை கவனமாக இயக்கி பாதுகாப்பான முறையில் பயணம் செய்யவும் அறிவுரை வழங்கினார்.