மதுரை: மதுரை மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மத்திய ரிசர்வ் படையினர் வருகை புரிந்துள்ளனர். எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு மாவட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு பாதுகாப்பு பணிகளை அவர்கள் மேற்கொள்ள உள்ளனர். மதுரை வந்த மத்திய ரிசர்வ் படையினரை மதுரை சரக காவல் துணைத் தலைவர் அபினவ் குமார், இ.கா.ப., மற்றும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பா.க. அர்விந்த், இ.கா.ப., ஆகியோர் காவல் அதிகாரிகளுடன் இணைந்து வரவேற்றனர்.
அதனைத் தொடர்ந்து மதுரை மாவட்டத்தின் நிலைமை, மாவட்டத்தில் நிலவும் சட்டம் மற்றும் ஒழுங்கு சூழ்நிலை மற்றும் பொதுமக்களுடன் காவல்துறையினர் நடந்து கொள்ளும் நடைமுறைகள் குறித்து மதுரை சரக காவல் துணைத் தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் மத்திய ரிசர்வ் படையினருடன் கலந்துரையாடினர். மேலும் தேர்தல் பாதுகாப்பு பணிகளை சிறப்பாக மேற்கொள்ள தேவையான வழிமுறைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்
















