திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, சின்னம்பேடு பகுதியில் சிறப்பு தாசில்தார் சித்ரா தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டிருந்த போது பொன்னேரி தொகுதி சின்னம்பேடு அரசு மதுபான கடைக்கு வெளியில் ராமநாதபுரம் மாவட்டம், திருவிடந்தை தாலுக்கா,ஆனந்தூர் கிராமத்தை சேர்ந்த சசிகுமார் என்பவர் கள்ளத்தனமாக பிராந்தி 21 முழு பாட்டில்கள், 2 அரை பாட்டில்கள், 2 பீர் மதுபான பாட்டில்களை விற்பனை செய்த போது தேர்தல் பறக்கும் படை குழுவினால் கைப்பற்றப்பட்டது. இந்த பாட்டில்களை பொன்னேரியில் உள்ள தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் மதிவாணன் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது. அப்போது தேர்தல் தாசில்தார் கனகவல்லி, துணை தாசில்தார் சீனிவாசன். காவல்துறை உதவி ஆய்வாளர் அனுமன் ஆகியோர் உடனிருந்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு