கிருஷ்ணகிரி : தமிழகத்தில், ஏப்., 19ல் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளதால், வாக்காளர்களுக்கு பணபட்டுவாடா செய்வதை தவிர்க்கும் வகையில், 50,000 ரூபாய்க்கு மேல் உரிய ஆவணமின்றி எடுத்து செல்லும் பணம், பரிசுப் பொருட்களை, தேர்தல் பறக்கும் படையினர் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ஜூஜூவாடி சோதனைச் சாவடி அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பெங்களூரில் இருந்து ஓசூர் நோக்கி வந்த வாகனத்தை பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். 64 பெட்டிகளில் இருந்த 15 கோடி ரூபாய் மதிப்பிலான, உரிய ஆவணங்கள் இல்லாத தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பறக்கும் படையினர் பறிமுதல் செய்த நகைகளை அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்