கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திரு.E.சுந்தரவதனம் IPS* அவர்கள் தலைமையில் (24.04.2024) மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் ஆயுதப்படையில் வைத்து நடைபெற்றது. இக்கூட்டத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து உதவி காவல் கண்காணிப்பாளர்கள், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் தேர்தல் பணியில் சிறப்பாக பணியாற்றிய மாவட்ட காவல் அலுவலக தேர்தல் கட்டுப்பாட்டு அறை காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்கள்,தனிபிரிவு ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்கள் முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது போக்குவரத்து அலுவலில் சிறப்பாக பணியாற்றிய போக்குவரத்து காவல் அதிகாரிகள் ஆகியோரை பாராட்டி பரிசு பொருள்,சான்றிதழ் வழங்கினார். மேலும் ஆயுதப்படை மைதானத்தில் வைத்து ஒவ்வொரு உட்கோட்டத்தில் உள்ள இருச்சக்கர மற்றும் நான்கு சக்கர காவல் வாகனங்களையும் ஆய்வு மேற்கொண்டு காவலர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.