திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பழவேற்காடு – பொன்னேரி செல்லும் சாலையில் விஜயகுமார் தலைமையிலான பறக்கும் படையினர் வாகன சோதனை பணியில் ஈடுபட்டிருந்தபோது, பழவேற்காடு-பொன்னேரி செல்லும் சாலையில் மெதூர் கிராமத்தின் வழியாக வந்து கொண்டிருந்த இருசக்கர வாகனத்தை பரிசோதனை செய்தபோது திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி வட்டம், அண்ணா தெரு, திருவேங்கடபுரம் என்ற முகவரியில் வசித்து வரும் சுந்தர் என்பவர் முறையான ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.2,26,600/- ( ரூபாய் இரண்டு இலட்சத்து இருபத்து ஆராயிரத்து ஆறுநூறு மட்டும்) தொகையினை மேற்படி தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினால் கைப்பற்றப்பட்டு இவ்வலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட உரிய கவரில் 6 இடங்களில் சீலிடப்பட்டு பொன்னேரி சார் கருவூலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு