திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர், மற்றும் பறக்கும் படையினரால் சட்டமன்றத் தேர்தல் நடத்தை விதிமுறைப்படி மேற்கொள்ளப்படும் வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு பணிகளை தென் மண்டல காவல்துறை தலைவர், விஜயேந்திர பிதாரி, இ.கா.ப., நேரில் ஆய்வு செய்ததுடன் அங்கு பணியில் இருந்த காவல்துறை அலுவலர்களுக்கு,
தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்தும், வாகன சோதனை பணிகளில் ஈடுபடும் போது, பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்தும் அறிவுரைகளை
வழங்கினார். இந்நிகழ்வில் திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் ப. சரவணன், இ.கா.ப., திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. வி. பிரசண்ண குமார், இ.கா.ப., ஆகியோர் உடன் இருந்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















