திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரிற்கு நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி மக்கள் பயமின்றி வாக்களிக்கவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் காவல்துறையுடன் இணைந்து செயல்பட எல்லை பாதுகாப்பு படையினர் வருகை தந்துள்ளனர். இவர்கள் (10.03.2026) மாநகர காவல் துறையினருடன் இணைந்து திருநெல்வேலி மாநகர சோதனை சாவடிகள் மற்றும் முக்கிய சந்திப்பு பகுதிகள் என 11 இடங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், தேஷ்முக் சேகர் சஞ்சய், இ.கா.ப., உத்தரவின் பேரில், மாலை திருநெல்வேலி மாநகரம் சந்திப்பு காவல் நிலைய எல்லைக்குட்ப்பட்ட C.N கிராமம் பகுதிகளில், கொடி அணிவகுப்பு நடைபெற உள்ளது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















