இராமநாதபுரம்: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடைபெற இருப்பதை முன்னிட்டு, பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு G.சந்தீஷ்,IPS., மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு B.K.அரவிந்த்,IPS., செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளர் திரு.சாய் பிரணீத்,IPS., சேலம் நகர் காவல் துணை ஆணையர் திரு.N.U.சிவராமன்,IPS., கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தங்கதுரை ஆகியோர் கோவில் வளாகத்தில் மற்றும் தேரோட்ட பாதையில் ஆய்வு மேற்கொண்டு ஒத்திகை மேற்கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு. அக்பர் அலி