தேனி: தேனி மாவட்டத்தில், தினந்தோறும் கொரானா தொற்று அதிகரித்து வருகிறது இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனையில், சிகிச்சைக்கு செல்லாமல் வீட்டிலேயே நூற்றுக்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு ஊர் சுற்றுவதை கண்காணிக்க, போலீசாரின் காவலன் செயலி மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது இதனடிப்படையில் மாவட்டத்தில் 7 பேர் கொரானா இருந்தும் விதிகளை மீறி ஊர் சுற்றியதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், போலீசார் மற்றும் சுகாதாரத் துறையினர் 7 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.