தேனி: தேனி மாவட்டம் முழுவதும் திருட்டு மது விற்பனையை தடுக்கும் வகையில் போலீசார் அதிரடி சோதனை மது பாட்டில்களை பதுக்கி வைத்த 30 பேர் சிக்கினர். 600 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தேனி மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக போலீசார் மது பாட்டில்களை, பதுக்கி வைத்து விற்பவர்களை கண்காணித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதில் மயிலாடும்பாறை, வீரபாண்டி, தேனி, ஆண்டிபட்டி, கம்பம் உள்ளிட்ட இடங்களில் போலீசார் நடத்திய சோதனையில் 600 மது பாட்டில்கள் வரை சிக்கின. இதில் சுந்தரராஜபுரம், பிரபாகரன் கடமலைக்குண்டு சரவணகுமார்,சரத்குமார் போடி குலாலர் பாளையத்தை சேர்ந்த, விஜய், தேனி சடையால்பட்டி முனீஸ்வரன், கம்பம் ராம்குமார், காட்டுநாயக்கன்பட்டி கண்ணன். உள்ளிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 600 மது பாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.