தேனி: தேனி நகரில் அரசு அறிவித்துள்ள கொரானா ஊரடங்கை மீறி பொதுமக்கள், அத்தியாவசிய தேவைகளுக்கு செல்லவேண்டும் என்று கூறிக்கொண்டு(தேவையற்ற காரணகளுக்கு ) அதிகளவில் நான்கு சக்கர மற்றும் இரு சக்கர வாகனங்களிலும் பயணிக்கிறார்கள். நோய்த்தொற்று அதிகம் பரவும் சூழ்நிலையில் மக்கள் பயணிப்பது நோய் தொற்றை அதிகரிக்க செய்துள்ளது. இதனை கட்டுப்படுத்திட தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வியிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து களப்பணியில், எஸ்.பி.நேரடியாக சென்று விதிமுறை மீறும் வாகன ஓட் டிகளுக்கு நோய் பரவல்,முகக்கவசம், ஊரடங்கின் அவசியம் குறித்து அறிவுரை கூறி தேவையின்றி சென்று வருபவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.