தேனி: தேனி எஸ்.பி. போலீஸார்க்கு வழங்கிய அறிவுரை :காவல் பணியின் போது பொதுமக்களிடம் அணுகுமுறை குறித்து காவல் அதிகாரிகள் மற்றும் போலீஸார்க்கு, ஆலோசனை மற்றும் அறிவுரை வழங்கிய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்,. திரு.டோங்கரே பிரவிண் உமேஷ்,
தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் உள்ள காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு காவல் பாதுகாப்பு பணியின் போது பொதுமக்களிடம் அணுகும் முறை, காவல் நிலையத்துக்கு வரும் புகார் மனுக்களை விசாரிக்கும் முறை, காவல் நிலையப்பணிகளை சட்டப்படி அணுகும் முறை ,
குற்றவாளிகளை கைது செய்யும்போது உச்ச நீதிமன்ற கட்டளைகளை கடைபிடிக்கும் முறை, கொரோனா நோய் தொற்று காலங்களில் பொதுமக்கள் பாதுகாப்பு கவனத்தில் கொண்டு காவல் பணிகளை முன்னெச்சரிக்கையுடன் கையாளுவது, பணியின் போது மன அழுத்தத்தை கையாளும் முறை குறித்து தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர். திரு.டோங்கரே பிரவிண் உமேஷ், காவல்துறையினருக்கு ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து உதவி காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் நிறை, குறைகளையும் கேட்டறிந்து, காவல்துறை பொது மக்களின் நண்பன் என்பதை நிரூபிக்கும் வகையில் நமது செயல்பாடு இருக்கவேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.