தேனி: அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து வந்த திரு.கோவர்த்தன அம்பிகை, திண்டுக்கல் மாவட்டம் இடையகோட்டை காவல் நிலையத்திற்கும், மதுரை மாவட்டம் பேரையூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த திரு. உஷா, தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு கடந்த 10ஆம் தேதியன்று பணியிட மாறுதல் செய்து காவல்துறை உத்தரவிட்டது.
இதனையடுத்து நேற்று காலை தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளர் திரு.உஷா பணிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். ஆய்வாளருக்கு காவலர்கள் மற்றும் பொதுமக்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.