தேனி : தேனியில் மெடிக்கல் கடையில் சிகிச்சை அளித்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டார். தேனி பழனிசெட்டிபட்டி காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் அப்துல் ரகுமான் (46), இவர் முறையாக மருத்துவம் படிக்கவில்லை. ஆனால் கோடாங்கிபட்டியில் உள்ள மெடிக்கல் கடையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார். இது தொடர்பாக சுகாதார பணிகள் இணை இயக்குநர் டாக்டர் லட்சுமணன் அளித்த புகாரின் பேரில் பழனிசெட்டிபட்டி போலீஸார் அப்துல் ரகுமானை கைது செய்தனர்.
தேனியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.P.நல்ல தம்பி