தேனி மாவட்டம்: உத்தமபாளையம், இராயப்பன்பட்டி, ஓடைப்பட்டி, கம்பம் தெற்கு, PC பட்டி ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடர் செயின் பறிப்பு மற்றும் திருட்டுகளில் ஈடுபட்டது தொடர்பாக காவல் நிலையங்களில் ஐந்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், *DSP திரு.சின்னகண்ணு* அவர்கள் தலைமையில் *SI திரு.ஜெயபாண்டி, SI திரு.முனியம்மாள், SSI திரு.ரவி, HC திரு.மணிகண்டன், HC திரு.மாரியப்பன், Gr I திரு.அழகுதுரை, Gr I திரு.பிரபு, PC திரு.சுந்தரபாண்டி* ஆகியோர்கள் அடங்கிய தனிப்படையினர் , விரைந்து செயல்பட்டு திருட்டில் தொடர்புடைய *மாணிக்கம் (26), செல்வராஜ் (31)* ஆகிய இருவரையும் கைது செய்து, 17 சவரன் மதிப்பிலான தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.