தேனி: தேனி மாவட்டம் தேவதானப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் பெரிய முருகன் மகன் அழகுராஜா (24). இவர் தேவதானப்பட்டியில் உள்ள அரசு மதுபான கடைக்கு மது வாங்க சென்றார். அப்போது இதே ஊரைச் சேர்ந்த சஞ்சய் என்பவரும் மது வாங்க வரும் போது அழகுராஜா அவரை இடித்துள்ளார். இதனால் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. உடனே சஞ்சய் அவருடன் வந்த அவர்களை அழைத்து அழகு ராஜா வை தாக்கியுள்ளனர். அழகுராஜா தாக்கப்பட்டதை கேள்விப்பட்டதும் அவருடன் இருந்த சிவசாமி (23), முத்துகிருஷ்ணன் (23) ஆகியோரும் தட்டிக்கேட்க அவர்களையும் சரமாரியாக தாக்கியுள்ளனர் . இதனால் மூன்று பேரும் பலத்த காயமடைந்தனர் அழகுராஜா தேவதானபட்டி போலீசில் புகார் செய்தார், புகாரின்பேரில் சப் இன்ஸ்பெக்டர் ஜோதி சுப்பிரமணியன் பாண்டி (26), சுந்தரபாண்டி (35), வேலுச்சாமி (51), பார்த்திபன் (30) ஆகிய 4 பேரை கைது செய்து சஞ்சய், தலம், ஜெயராம் ஆகிய மூவரை தேடி வருகின்றனர்.