தர்மபுரி : தர்மபுரி அரசு கலைக் கல்லூரியில் (25-03-2023), காலை 10 மணி அளவில் கல்லூரி புதிய கலையரங்கில் தேசிய மாணவர் படை சார்பாக “இணைய வழி குற்றங்கள் சார்ந்த விழிப்புணர்வு “கருத்தரங்கம் நடைபெற்றது. மதிப்புமிகு கல்லூரியின் முதல்வர் ப.கி. கிள்ளிவளவன் அவர்கள் தலைமையேற்றார்.கூட்டுறவுத் துறைத்தலைவர் திரு.பெ.ராஜேந்திரன் அவர்கள் முன்னிலை வகித்தார். வரலாற்றுத் துறை உதவிப்பேராசிரியர் திரு.சபாபதி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். அதியமான் கோட்டை காவல் ஆய்வாளர் திரு.நவாஸ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இணைய வழி குற்றங்கள் சார்ந்த விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார். தேசிய மாணவர் படை அலுவலர் திரு. ஏ. தீர்த்தகிரி அவர்கள் நன்றியுரை கூறினார்.
தருமபுரியிலிருந்து குடியுரிமை நிருபர்
ம. லெனின்