மதுரை : தேசிய போட்டியில் சாதனை புரிந்த மதுரை ஆயுதப்படை தடகள கிளப் மாணவியை தென்மண்டல காவல்துறை தலைவர் திரு.K.S.நரேந்திரன் நாயர் IPS., அவர்கள், மதுரை சரக காவல்துறை துணைத் தலைவர் திருமதி.ரம்யா பாரதி IPS., அவர்கள், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சிவபிரசாத் IPS., அவர்கள் ஆகியோர் பாராட்டினர்.
கோவையில் நவம்பர் 7ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை (18). வயதினருக்கான தேசிய இளையோர் தடகள வாகையாளர் போட்டி நடந்தது. இப்போட்டியில் மதுரை மாவட்ட காவல் துறையில் பணிபுரியும் தலைமை காவலர் சந்துருவின் ஆயுதப் படை தடகள கிளப்பில் (Armed Reserve Athletic club) பயிற்சி பெற்ற கல்லூரி மாணவி ஓ.பமில வர்சினி பங்கேற்றார்.
மகளிர் பிரிவில் மூன்று முறை தாண்டுதல் (ட்ரிபிள் ஐம்ப்) போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்று பயிற்சி கிளப்புக்கும் மதுரை மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
தென் மண்டல காவல் துறை தலைவர் திரு.K.S.நரேந்திரன் நாயர் IPS., அவர்கள், மதுரை சரக காவல்துறை துணைத் தலைவர் திருமதி. ரம்யா பாரதி IPS., அவர்கள், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சிவபிரசாத் IPS., அவர்கள் பதக்கம் என்ற மாணவி மற்றும் பயிற்சியாளர் சந்துருவை பாராட்டினர். சாதனை புரிந்த மாணவியின் தாயார் மகாதேவி மதுரை காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணிபுரிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.