திருநெல்வேலி: திருநெல்வேலி மேலப்பாளையம் அல்அமீன் நகர் யுனைடெட் காலனியைச் சேர்ந்த காதுரையா மகன் இம்தியாஸ் (42). இவர், மேலப்பாளையம் திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர், வினோத் சாந்தாராம் (கிழக்கு) பரிந்துரையின் பேரில், திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், சந்தோஷ் ஹாதிமணி இ.கா.ப., பிறப்பித்த உத்தரவின்படி, அவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்