திருநெல்வேலி: திருநெல்வேலி தச்சநல்லூர், சத்திரம் புது குளத்தை சேர்ந்த வர் கண்ணபிரான் என்ற கந்தசாமி (45). மற்றும் வீரவநல்லூர், நயினார்காலனியை சேர்ந்த சிவா என்ற ராக்கி சிவா, (28). ஆகிய இருவரும் இரு சமுதாய மக்களிடையே பிரச்சனையை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்தும், சட்டவிரோதமாக துப்பாக்கி, நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் அருவாள்களை வைத்திருந்ததற்காகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மேற்கண்ட நபர்கள் பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக தாலுகா காவல் ஆய்வாளர், ராஜகுமாரி கவனத்திற்கு வந்ததால், மேற்படி குற்றவாளிகளை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், N. சிலம்பரசன்.இ.கா.ப.,விற்கு வேண்டுகோள் விடுத்ததின் பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில், இருவரும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடலூர் மத்திய சிறையில் (17.11.2024) அடைக்கப்பட்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்